முகப்பு
நூல் அரங்கம்

வேளாண் சமூகக் கட்டமைப்பு

புனைகதை இலக்கியத்தில் இவ்விரு நாவல்களும் தனிச்சிறப்புடையவை என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

Updated On : 9 மார்ச், 2026 at 7:23 AM
பகிர்:

வேளாண் சமூகக் கட்டமைப்பு (பெருந்திணை & விதைத்தவனும் விதைகளும்)- முனைவர் கு.சுதாகர்; பக்.120; ரூ.140; தென்புலம் பதிப்பகம், சென்னை-600 018; ✆ 98840 93737.

கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் நூலாசிரியர், இரு நாவல்களுக்கான ஒப்புமைகள், முரண்பாடுகள், சமூக மதிப்பீடுகள் போன்றவை குறித்து முழுமையாக ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார்.

வேளாண்மை குறித்து தஞ்சாவூரை மையமிட்டு எழுதப்பட்ட சோலை சுந்தரபெருமாளின் 'பெருந்திணை' நாவலையும், திருவண்ணாமலையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ப.முருகனின் 'பெருந்திணை' நாவலையும் ஒப்பிட்டு ஆய்வு நோக்கில் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.

இவ்விரு படைப்பாளர்களின் அறிமுகம் தொடங்கி, நாவலின் தொடக்கப் பகுதி, மகப்பேறும் மரணமும், வட்டார வழக்கும் வாய்மொழிக் கூறுகளும், சிவன் கோயிலும் சில பதிவுகளும், பெண் குறித்த மதிப்பீடு, விளைச்சலும் மன உளைச்சலும், ஆறுமுகமும் ஆணைமுத்தும் (இரு நாவலின் கதாநாயகர்கள்), வேளாண் சமூக வாழ்வும் வலியும், படைப்பாளர் படைத்த வாசகங்கள் என்ற தலைப்புகளில் ஒப்பீடுகள் அமைந்துள்ளன.

ஒப்பீடு நூலிலேயே இரு நாவல்கள் குறித்த சுருக்கமும், பண்ணையாளர்களைக் குறித்தும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வியல் முறைகள், காவிரி டெல்டா பகுதி விவசாயத்தையும் வட மாவட்ட விவசாயத்தையும் அறிய முடிகிறது. பண்ணையாளர் சமூகத்துக்கும் நிலத்தில் கூலிகளாக வாழ்வோருக்குமான போராட்டங்கள், எதிரெதிர் நிலைகளில் இருவேறு சமூகக் கட்டமைப்பில் வாழும் மக்களின் வாழ்வியலை இரு படைப்பாளர்களும் அவரவர் பார்வையில் இருந்து வெளிப்படுத்தியிருப்பதன் வாயிலாக உணர முடிகிறது.

புனைகதை இலக்கியத்தில் இவ்விரு நாவல்களும் தனிச்சிறப்புடையவை என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →