முகப்பு
நூல் அரங்கம்

ஐம்பெருங் காப்பியம் சீவக சிந்தாமணி - மூலமும் உரையும் (இரண்டு, மூன்றாம் பாகங்கள்)

இத்தகைய புதிய பதிப்பு முயற்சிகள் சிந்தாமணி சிறக்க உதவியாக இருக்கும்.

Updated On : 11 மே 2026, 4:50 pm IST
பகிர்:

ஐம்பெருங் காப்பியம் சீவக சிந்தாமணி - மூலமும் உரையும் (இரண்டு, மூன்றாம் பாகங்கள்), உரையாசிரியர் - முனைவர் கரு. முத்தய்யா, பக். 592, ரூ. 500; பக். 584, ரூ. 600; கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600 033, ✆ 04565 - 238783.

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை வெளியிட்ட கோவிலூர் மடம், சீவகசிந்தாமணியையும் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளது. பின்னிரு நூல்களில் இரண்டாம் பாகத்தில் 1,144 பாடல்களுக்கும், மூன்றாம் பாகத்தில் 1,151 பாடல்களுக்கும் மூலத்துடன் பொருளும் பதவுரையும் தேவைப்படும் இடங்களில் விளக்கமும் தந்திருக்கிறார் உரையாசிரியர் கரு. முத்தய்யா.

உ.வே.சா. விளக்கக் குறிப்புகளுடன் நச்சினார்க்கினியர் விளக்கத்தையும் ஒப்புநோக்கி, எளிமையாக, ஆனால் ஆய்வு மாணவர்களும் பயனுறத்தக்க உரை நூலைத் தந்துள்ளார்; வள்ளுவத்துக்கு விளக்கமாகவும் நூல் அமைவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

சிந்தாமணி முழுவதும் திருத்தக்க தேவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் கவிநயமும் பொருள் நயமும் கொண்டவை. கன்னி மாநகர்க் கன்னியர் சூழ்தரக் / கன்னி மாடம் அடையக் கடிமலர்க் / கன்னி நீலக்கண் கன்னிநற் றாய்க்கவள் / கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினர். ஏழு முறை இடம்பெறும் கன்னி என்ற சொல் விதவிதமான பொருள் தருகிறது.

சீவகனின் மகிழ்ச்சிமிக்க வாழ்வை உற்சாகமான பாடல்களில் விவரிக்கும் திருத்தக்க தேவர், காப்பியத்தின் நிறைவில் சீவகன் கூற்றாக நிலையாமை பற்றிக் குறிப்பிடுகிறார். இந்தப் பாடல்கள் யாவும் தனிச் சிறப்பு கொண்டவை. ஒளிறுதேர்... என்ற பாடலில் சீவகன் செய்த தவத்தைப் போராக உருவகித்துப் பாடுகிறார் தேவர்.

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் அளவுக்கு மணிமேகலையும் மணிமேகலை அளவுக்கு சீவக சிந்தாமணியும் தமிழ் மக்களை, வாசகர்களைச் சென்றடையவில்லை எனலாம்.

இத்தகைய புதிய பதிப்பு முயற்சிகள் சிந்தாமணி சிறக்க உதவியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments