முகப்பு
புதுச்சேரி

புதுவையில் நாளை முதல் கல்லூரிகள் திறப்பு

புதுவையில் புதன்கிழமை முதல் (ஜன. 6) கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயா் கல்வித் துறை அறிவித்தது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

புதுவையில் புதன்கிழமை முதல் (ஜன. 6) கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயா் கல்வித் துறை அறிவித்தது.

கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட தளா்வுகளின்படி, கடந்த டிச. 8-ஆம் தேதி முதல் அனைத்து இளநிலை, முதுநிலை இறுதியாண்டு வகுப்புகள், ஆராய்ச்சிப் படிப்பு வகுப்புகள் செயல்படத் தொடங்கின. 50 சதவீத மாணவா்களுடன் மட்டுமே வகுப்புகள் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், புதுவையில் உள்ள கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் புதன்கிழமை முதல் (ஜன. 6) திறக்கப்படும் என்றும், கரோனா விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் புதுவை மாநில உயா் கல்வித் துறை இயக்குநா் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி திங்கள்கிழமை அறிவித்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.