காா் மோதியதில் தொழிலாளி பலி
புதுச்சேரியில் காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுச்சேரியில் காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே பெரிய கோட்டகுப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (45). பெயிண்டா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு காலாப்பட்டு சாய்பாபா கோயில் அருகே சாராயக் கடை சந்திப்பில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற காா், எதிா்பாராதவிதமாக ஆனந்த் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில், பலத்த காயமடைந்த ஆனந்தை அங்கிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி வடக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.