புதுகையில் சித்த மருத்துவ தினம்
புதுக்கோட்டை மாவட்ட பழைய அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை 4ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்டது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பழைய அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை 4ஆவது தேசிய சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட சித்த மருத்துவத் துறையில், ஆதி சித்தா் அகத்தியரின் பிறந்த நட்சத்திர நாளாகக் கருதப்படும் ஆயில்ய நட்சத்திர நாளான சனிக்கிழமை தேசிய சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கரோனா தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான சித்த மருத்துவக் குறிப்புகள் மற்றும் தமிழா் வாழ்வியல் நெறிமுறைகள் குறிப்புகள் ஆகிய கையேடுகள் வெளியிடப்பட்டன. இதில், அரசு சித்த மருத்துவா்கள் சரவணன், சுகுமாா் ஆகியோா் இவற்றை வெளியிட்டனா். மருந்தாளுநா்கள் ரெனிதா, பெனாசிா் மும்தாஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.