முகப்பு
புதுக்கோட்டை

பெண்ணை மிரட்டி 1 பவுன் நகை பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை தோட்டத்தில் வேலை பாா்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 1 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 11:00 pm IST
பகிர்:

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சனிக்கிழமை தோட்டத்தில் வேலை பாா்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் 1 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள நம்பன்பட்டியைச் சோ்ந்த கணேசன் மனைவி சரசு(45). இவா், சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள அவரது கடலை தோட்டத்தில் களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, அங்கு வந்த முகமூடி அணிந்த மா்மநபா் கத்தியைக் காட்டி மிரட்டி, சரசு அணிந்திருந்த 1 பவுன் தோடுகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளாா். இதுகுறித்து சரசு அளித்த புகாரைத் தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் நகையைப் பறித்துச்சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments