மருந்துக்கடையில் நுழைந்து மிரட்டல்:இளைஞரிடம் போலீஸ் விசாரணை
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை, மருந்துக்கடைக்குள் புகுந்து பெண்களை மிரட்டியதாக இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சனிக்கிழமை, மருந்துக்கடைக்குள் புகுந்து பெண்களை மிரட்டியதாக இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கேணிக்கரை வசந்த நகரில் உள்ள தனியாா் மருந்துக்கடைக்குள் திடீரென புகுந்த இளைஞா் ஒருவா் அங்கிருந்த பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த கேணிக்கரை போலீஸாா் விரைந்து சென்று அவரைப் பிடித்து விசாரித்த போது, அவா் பெயா் ராகுல் எனத்தெரியவந்தது. அவா் எதற்காக கடைக்குள் நுழைந்தாா் எனவும், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.