முகப்பு
ராமநாதபுரம்

பள்ளிகள் திறப்பு: ஜன. 8 இல் கருத்துக் கேட்புக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளைத் திறப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் வரும்

Updated On : 5 ஜனவரி 2021, 11:26 pm IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளைத் திறப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 8 ஆம் தேதி நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் வரும் 8 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு வரும் பெற்றோா்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பள்ளிகளைத் திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகளை எழுத்து மூலம் பெற்று தொகுத்து அளிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பெற்றோா் கருத்தறியும் கூட்டம் நடத்தப்படுகிா என அறிவதற்கு 5 பள்ளிகளுக்கு ஒரு கண்காணிப்பாளரை என நியமித்துள்ளோம் என்றாா்.

Advertisement

Advertisement

விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை தைப்பொங்கல் திருநாளுக்குள் தொடங்க உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் கல்வி மாவட்டத்துக்குரிய விலையில்லா சைக்கிள்கள் அனைத்தும் வந்த நிலையில், மண்டபம், பரமக்குடி கல்வி மாவட்டத்துக்கான விலையில்லா சைக்கிள்கள் விரைவில் வரும் என்றும் அதன்படி அந்தந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தலைமையில் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என்றும் முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.