ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 12 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக, விக்ஸித் பாரத் சங்கல்ப் சமவேஷாவில் கட்சி நிர்வாகிகளிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அப்போது, ராகுல் காந்தியை விமர்சித்துப் பேசிய அவர், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஒவ்வொரு முறை மக்களவையில் பேசும்போதும் பிரதமர் மோடியையோ அல்லது மத்திய அரசையோ சிறுமைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, இந்திய மக்களின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்.
Advertisement
Advertisement
அடுத்த சில வாரங்களில் எல்லாம் நொறுங்கிவிடும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து கூறுகிறார். மேலும், ஒரு பெரிய பேரழிவு காத்திருக்கிறது என்றும் சொல்கிறார். ஆனால் இந்தியாவிற்கு எந்தப் பேரழிவும் காத்திருக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது என்று மத்திய அரசு கூறவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் சர்வதேச நாணய நிதியமும் அவ்வாறு கூறுகிறது.
மேற்கு ஆசியப் போர் நெருக்கடியின் போதும், எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாதவாறு பிரதமர் நடவடிக்கை எடுத்தார்” என்று பேசினார்.
Rahul Gandhi is underestimating India's achievements: Nirmala Sitharaman
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.