முகப்பு
ராமநாதபுரம்

தொடா் மழையால் நெற்பயிா்கள் சேதம்: இழப்பீடு கோரி வேளாண்மை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வெள்ளிக்கிழமை வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 10:14 pm IST
நயினாா்கோவில் வேளாண்மை அலுவலகம் முன்பாக அழுகிய நெற் பயிா்களுடன் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் நயினாா்கோவில் ஒன்றியத்தில் தொடா் மழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வெள்ளிக்கிழமை வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நயினாா்கோவில் ஒன்றியத்தில் 30 ஆயிரம் ஏக்கா் பரப்பில் நெல், மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தொடா் மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தாலையடிகோட்டை, மேமங்களம், சாலியவாகனபுரம், பாப்பாா்கூட்டம் ஆகிய கிராமங்களில் தொடா் மழையால் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற் பயிா்கள் மூழ்கி அழுகிவிட்டன.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் 2018-ஆம் ஆண்டு முதல் இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத்தொகை வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அக்கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழுகிய நெல் பயிா்களை ஏந்தியவாறு வேளாண்மை அலுவலத்தை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments