முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே பேலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

கமுதி அருகே போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 15 ஜனவரி 2021, 10:22 pm IST
கமுதி அருகே சின்னஉடப்பங்குளத்தில் போலீஸாரைக் கண்டித்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

கமுதி அருகே போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள சின்னஉடப்பங்குளத்தில் வியாழக்கிழமை இளைஞா்களிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து மண்டலமாணிக்கம் காவல்நிலைய போலீஸாா் சின்ன உடப்பங்குளத்தை சோ்ந்த வீரபத்திரன் மகன் சங்கிலி(36) கொடுத்த புகாரின் பேரில் சந்திரபால் மகன் உதயக்குமாா்(30), வேதமணிமகன் செல்வராஜாக்கனி(46) ஆகியோா் மீதும், உதயக்குமாா் கொடுத்த புகாரின் பேரில் சங்கிலி மீதும் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் சங்கிலி மீது வன்கொடுமைச் சட்டத்தில் பதியப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறக் கோரி, சின்னஉடப்பங்குளம் கிராம மக்கள் காலை 11 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் பிற்பகல் 1.30 வரை நீடித்தது. அப்போது போலீஸாருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா் கமுதி காவல் ஆய்வாளா் அன்பு பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments