பாலியல் குற்றங்கள் பற்றி வாய் திறக்காத முதல்வர்! திமுக எம்எல்ஏவின் கேள்விக்கு எதிர்ப்பு!
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்புவது பற்றி...
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், 'என்ன நடந்தாலும் நான் வாய் திறக்கமாட்டேன் என சரித்திர புரட்சியை ஏற்படுத்தி வருபவர் முதல்வர் விஜய்' என்று பேசினார்.
இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கையில், "எங்கள் முதல்வர், கொளத்தூரில் பேசியதால் என்ன தேர்தல் முடிவு வந்தது என அனைவருக்கும் தெரியும். என்ன பேச வேண்டும் எப்போது பேச வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.
Advertisement
Advertisement
முதல்வரை கொச்சைப்படுத்தும் விதமாக திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பேசி வருகிறார்" என்றார்.
ஆனால், உள்துறையை நிர்வகிக்கும் முதல்வர் விஜய், எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
இதேபோன்று மகளிருக்கு ரூ. 2,500, முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என தவெகவின் வாக்குறுதிகள் குறித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் முதல்வரோ, துறை சார்ந்த அமைச்சர்களோ இதுபற்றி எதுவும் பதிலளிக்கவில்லை. மாறாக, அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா பதிலளித்து வருகின்றனர்.
"தற்போது ஆளுநர் உரை குறித்து மட்டுமே பேரவை உறுப்பினர்கள் பேச வேண்டும். விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம்" என்றும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
திமுக எம்எல்ஏ ஆஸ்டினை பேச அனுமதிக்காததால் தவெக - எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Chief Minister remains silent on sexual crimes: Objection raised to DMK MLA question
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.