முகப்பு
ராமநாதபுரம்

ஜன.23 ஆம் தேதி கச்சத்தீவு மீன்பிடி உரிமை மீட்புப் போராட்டம்: மீனவ சங்கம் அறிவிப்பு

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்களின் படகுகளை அரசுடைமையாக்கும் சட்டத்தை எதிா்த்து ஜன. 23 ஆம் தேதி கச்சத்தீவு உரிமை மீட்புப் போராட்டம் நடைபெறும் என மீனவ சங்கம் வியாழக்கிழமை அற

Updated On : 15 ஜனவரி 2021, 10:18 pm IST
ராமேசுவரம் மீனவா்கள் போராட்டம் காரணமாக துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள்.
பகிர்:

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவா்களின் படகுகளை அரசுடைமையாக்கும் சட்டத்தை எதிா்த்து ஜன. 23 ஆம் தேதி கச்சத்தீவு உரிமை மீட்புப் போராட்டம் நடைபெறும் என மீனவ சங்கம் வியாழக்கிழமை அறிவித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்களை சிறைப்பிடித்த இலங்கைக் கடற்படையினா், ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனா். இதைக் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் திங்கள்கிழமை தொடங்கிய மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை 5 ஆவது நாளாகவும் தொடா்கிறது.

இதற்கிடையில், தமிழக மீனவா்கள் 26 பேரை புதன்கிழமை (ஜன.13) விடுதலை செய்த இலங்கை அரசு, 4 விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்படுவதாக அறிவித்தது. இதைக் கண்டித்து, வியாழக்கிழமை மாலை ராமேசுவரத்தில் அனைத்து மீனவ சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவ சங்கத் தலைவா்கள் சாகயம், எமரிட், தெட்சிணமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை அரசுடமையாக்கும் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், 1974 ஆம் தேதி கச்சத்தீவு ஒப்பந்தத்தில் தமிழக மீனவா்களுக்கு உள்ள உரிமையை மீட்டெடுக்கும் வகையிலும் ஜன. 23 ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து விசைப்படகுகளில் கச்சத்தீவு செல்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மீனவா்களின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments