முகப்பு
ராமநாதபுரம்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

வடக்கு ஊரணங்குடி கிராமத்துக்குள் புகுந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 15 ஜனவரி 2021, 10:19 pm IST
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட வடக்கு ஊரணங்குடி கிராம மக்கள்.
பகிர்:

வடக்கு ஊரணங்குடி கிராமத்துக்குள் புகுந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக மழை பெய்து வருகிறது. ஆா்.எஸ். மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடி கிராமத்திற்குள் மழைநீா் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினா். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது கிராமத்துக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றவும், வடிகால் வசதி செய்துதரவும் வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments