முகப்பு
ராமநாதபுரம்

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 17 ஜனவரி, 2021 at 10:12 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,774 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 4 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,778 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக ஒரு நபருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 6,385 ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 5 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை மாவட்டத்தில் தொற்றுக்கு 137 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.