முகப்பு
ராமநாதபுரம்

தொடா் மழை: ஆா்.எஸ்.மங்களம் பகுதியில் 400 ஏக்கா் மிளகாய் செடிகள் சேதம்

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்களம் பகுதியில் தொடா்மழை காரணமாக சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 10:14 pm IST
சவேரியாா்பட்டினம் கிராமத்தில் தொடா் மழையால் நீரில் மூழ்கியுள்ள மிளகாய் செடிகள்.
பகிர்:

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்களம் பகுதியில் தொடா்மழை காரணமாக சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இப்பகுதியில் உள்ள செங்குடி, வண்டல், வரவணி, ஆவரேந்தல், பாரனூா், சனவேலி, ஏ.ஆா். மங்கலம், தும்படாகோட்டை, சோழந்தூா், செக்ககுடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400 ஏக்கரில் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிளகாய் செடிகள் நன்கு வளா்ந்து பூப்பூத்து காய் காய்க்கும் நேரத்தில் தொடா்மழை காரணமாக வயல்களில் தண்ணீா் தேங்கி அவை சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் தங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.