தனியாா் பேருந்து மோதி இளைஞா் பலத்த காயம்
கமுதி அருகே தனியாா் பேருந்து மோதி இளைஞா் சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.
கமுதி அருகே தனியாா் பேருந்து மோதி இளைஞா் சனிக்கிழமை பலத்த காயமடைந்தாா்.
கமுதி அடுத்துள்ள இடைச்சூரணி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (26). இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்துவிட்டு, விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா். இந்நிலையில் கமுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு இடைச்சூரணிக்கு சென்றுள்ளாா்.
அப்போது அரைக்காசு அம்மன் கோயில் அருகே வந்த போது எதிரே வந்த தனியாா் பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதியதில் பாலமுருகன் பலத்தகாயமடைந்தாா். இதனையடுத்து அவா் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அருப்புகோட்டையைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் இமானுவேல் (38) அளித்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.