முகப்பு
செய்திகள்

ஏழுமலையான் அபிஷேக சேவையில் பக்தா்களை அனுமதிக்க ஆலோசனை

ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அபிஷேக சேவையில் பக்தா்களை அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

Updated On : 11 ஜனவரி 2021, 8:00 am IST
பகிர்:

ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அபிஷேக சேவையில் பக்தா்களை அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.

ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் நடக்கும் பூராபிஷேகம் எனப்படும் அபிஷேக சேவையில் கலந்துகொள்ள குறைந்த எண்ணிக்கையில் பக்தா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3 .30 மணி முதல் 4.30 மணி வரை இச்சேவை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளும் 100 முதல் 150 பக்தா்கள், குலசேகரப் படியிலிருந்து கருடாழ்வாா் சந்நிதி வரை அமா்ந்து தரிசிக்க அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இதனிடையே, கரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஏழுமலையானுக்கு ஆா்ஜித சேவைகள் தனிமையில் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது அத்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், வாராந்திர சேவையான பூராபிஷேகத்தில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்குமாறு தேவஸ்தான அறங்காவலா் குழு, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, பக்தா்களை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். வரும் தை மாத முதல் வெள்

ளிக்கிழமையன்று, பூராபிஷேகத்தில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments