முகப்பு
ஆன்மிகம்

"திருமலையில் மேலும் 2,000 கண்காணிப்பு கேமராக்கள்'

திருமலையின் பாதுகாப்புக்காக மேலும் 2000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தேவஸ்தான செயல்

Updated On : 2 மார்ச் 2013, 4:16 am IST
பகிர்:

 திருமலையின் பாதுகாப்புக்காக மேலும் 2000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

திருமலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் இதில் பங்கு கொண்டு தங்கள் கேள்விகளைத் தொலைபேசி மூலம் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியத்திடம் கேட்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இணையதளத்தின் மூலம் பதிவு செய்யும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது. அதற்குப் பதிலாக திருச்சானூர் பத்மாவதி தாயார், ஸ்ரீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி, திருப்பதி கோவிந்தராஜஸ்வாமி ஆகிய கோயில்களின் ஆர்ஜித சேவைகளைப் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.