இன்றைய செய்திகள் ஜூன் 13 - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.
வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை
வேலூர் மாவட்டத்தில் திடீரென பெய்த பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்!
அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆவின் மேஜிக் பால்: யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கம்; தவெக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
ஆவின் மேஜிக் பால் விவகாரத்தில் யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை தவெக அரசு அளிக்கிறது என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள்: மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆய்வு
ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறு தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி.வி. சோமநாதன் ஆய்வு செய்தார்.
பாஜகவிலிருந்து, தவெகவுக்கு வந்தது ஏன்? மனம் திறந்தார் விஜயதரணி!
போதைப் பொருள் கலாசாரம் ஒழிக்கவும், பெண்களை பாதுகாக்க உறுதி தரும் காரணங்களால் தவெகவில் இணைந்திருப்பதாக முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் எடுக்கப்போகும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம்!
சென்னையின் பல முக்கிய இடங்களுக்கு திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மிக எளிதாக சில நிமிடங்களில் சென்று விடலாம் என்பதைக் காட்டிலும், இனி அலுவலக சந்திப்பு, பொருள்களை வாங்க, உணவருந்த என பயணிகளின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உருவாகவிருக்கிறது.
தவெகவில் இணைந்தார் விஜயதரணி
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதரணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு, கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படாததால், தற்போது பாஜகவிலிருந்து விலகி தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்படவில்லை: தமிழக அரசு
ஆவின் நிறுத்தின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்ட வில்லை என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, விநியோகம் நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவித்துள்ளது.
நிஃபா வைரஸ் பரவலை மெத்தனமாகக் கையாளும் கேரள அரசு!
நிபா வைரஸ் பரவலைக் கையாளுவதில் மாநில அரசு "மெத்தனமாக" செயல்படுவதாகக் கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் சனிக்கிழமை குற்றம் சாட்டினார்.
நீட் மறுதேர்வு அறிவிப்பால் பொறியியல் கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு!
நீட் மறுதேர்வால் தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தாமதமாக வாய்ப்புள்ளது.
பாஜகவின் நலனுக்கு உதவுகிறாரா ராகுல் காந்தி? பினராயி விஜயன் காட்டம்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் அணுகுமுறை, பாஜகவின் நலனுக்கு உதவுவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் சனிக்கிழமை (ஜூன் 13) விமர்சித்தார்.
தந்தையர் தினம் எப்போது? தனக்காக வாழத் தெரியாதவர்களுக்கான நாள்!
காதலர் தினம், நண்பர்கள் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம் போல் அல்லாமல், தந்தையம் தினம் பொதுவாக எப்போது கொண்டாடப்படுகிறது என்பது முன்கூட்டியே தெரிவதில்லை.
அமைச்சர் ரமேஷுடன் புகைப்படம் வேண்டுமா? க்யூஆர் கோடு அறிமுகம்!
இந்து அறநிலையத் துறை அமைச்சருடன் புகைப்படம் எடுக்க வேண்டுமா? க்யூஆர் கோடு ஸ்கேன் செய்க என்ற அறிவிப்புப் பலகை
பிரதமர் மோடி இன்று பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணம்!
பிரதமர் நரேந்திர மோடி 6 நாள்கள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு இன்று(ஜூன் 13) செல்வது குறித்து...
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது! - அமெரிக்கா
ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை, திறந்தே உள்ளது என்று அமெரிக்க மத்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.