பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்!

அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் பிரதமர் கூறியது பற்றி...

கமேனி - ஷெபாஷ் ஷெரிஃப் - டிரம்ப் - கோப்புப் படம்

Published On :

அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால் உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் முடிந்து போர்நிறுத்தம் செய்யப்படும் என பல நாள்களாக மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் தெரிவித்து வருகின்றன.

ஏப்ரல் 8 அன்று தற்காலிக போர்நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், பல வாரங்களாக அமைதி பேச்சுவார்த்தை நீடித்து வருகின்றது. ஆனால், அது இன்னும் உறுதிசெய்யப்படாமலே உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனக் கூறி வந்த நிலையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் தனது சமூக வலைதளப் பதிவில், “முன்னெப்போதையும் விட அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு முடிவை எட்டவிருக்கிறோம். இறுதி முடிவு 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக அமைதி ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடுப்பட்டு, தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

பேச்சுவார்த்தையில் தொடர்ந்து அர்ப்பணிப்பு காட்டிய அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், பிராந்தியத்தில் எங்களுக்கு ஆதரவளித்த சகோதர நாடுகளுக்கும் எங்களது நன்றி.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் மூலம் நீண்டகால அமைதிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமையும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Peace agreement between the US and Iran within 24 hours: Pakistan PM reveals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.