முகப்பு
செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று திருமங்கை..

Updated On : 25 டிசம்பர் 2018, 4:13 pm IST
பகிர்:

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுகிறது. 

ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கடந்த 18-ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் நடைபெற்றது. இதையொட்டி ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறகிறது. 

இதையொட்டி மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 6.15 மணி வரை வையாளி வகையறா பண்டருளுகிறார். பின்னர் மாலை 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். இரவு 8.15 மணிக்கு மேல் உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவை நடைபெறுகிறது. 

Advertisement

Advertisement

27-ம் தேதி தீர்த்தவாரியும், 28-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments