FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

வளைகுடாவிலிருந்து படைகள் திரும்ப பெற அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 24 ஜூன் 2026, 8:40 am IST
அதிபர் டொனால்ட் டிரம்ப். - ஏபி
பகிர்:

ஈரானுக்கு எதிரான போரில் வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகளைத் திரும்ப பெற அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த அதிபர் டொனால்ட் டிரம்ப்பிரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த, ஜனநாயக்கட்சி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக, வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகளைத் திரும்ப பெற வேண்டும் என செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தத் தீர்மானத்துக்கு டிரம்ப்பின் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களான சூசன் காலின்ஸ் (மெய்ன்), லிசா முர்கோவ்ஸ்கி (அலாஸ்கா), ராண்ட் பால் (கென்டக்கி) மற்றும் பில் காசிடி (லூசியானா)  ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஜான் பெட்டர்மேன் (பென்சில்வேனியா) தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். பிரதிநிதிகள் சபையில் 50-48 வாக்குகள்  அடிப்படையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் ஒரு கூட்டுத் தீர்மானம் என்பதால், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட போதிலும் இதற்கு அதிபர் டிரம்ப்பின் கையொப்பம் தேவையில்லை என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்தத் தீர்மானம் ஈரானுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்து வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

summary

The Senate on Tuesday adopted a Iran war powers resolution passed earlier this month in the House by a 50-48 vote in a symbolic, yet rare, rebuke of President Donald Trump.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments