கத்தாா் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் பேச்சு: ஈரானுடன் சுமுக உறவு நிலவுவதாக டிரம்ப் தகவல்
அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை நிரந்தரமாக்குவதற்கான தொழில்நுட்ப வழிகள் குறித்து...
அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை நிரந்தரமாக்குவதற்கான தொழில்நுட்ப வழிகள் குறித்து ஆலோசிப்பதற்கு அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை கத்தாா் தலைநகா் தோஹாவில் புதன்கிழமை தொடங்கியது.
இச்சூழலில், அமெரிக்கா-ஈரான் உறவு மிகவும் சுமுகமாக உள்ளதாகவும், ஈரானின் அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகள் நல்லமுறையில் முன்னேறி வருவதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
3 மாத கால மோதலுக்குப் பிறகு அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட ஓா் இடைக்கால அமைதி ஒப்பந்தத்தின்படி, ஹோா்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தியது.
Advertisement
Advertisement
வருங்காலத்தில் ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்குக் கட்டணம் விதிப்பதற்கான முயற்சியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இச்சூழலில், ஓமனுடன் இணைந்து அந்நாட்டு கடற்கரையொரம் புதிய வழித்தடத்தை ஐ.நா. திறக்க முற்பட்டபோது மீண்டும் ராணுவ மோதல் வெடித்தது.
இவ்வாறு இடைக்கால ஒப்பந்தத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே கடும் கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் பதற்றமான சூழலில் கத்தாா், பாகிஸ்தான் நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் இப்பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அமெரிக்கா சாா்பில் டிரம்ப்பின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோா், கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி மற்றும் அந்நாட்டு பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் ஜாஸிம் அல் தானியைச் சந்தித்துப் பேசினா்.
இதேபோல், ஈரான் பிரதிநிதியான அந்நாட்டு வெளியுறவு இணையமைச்சா் காஸிம் கரீபாபாதி, கத்தாா் பிரதமா் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தா்களைச் சந்தித்து, இடைக்கால ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் தடைகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டாா்.
Trump has stated that the indirect talks between the US and Iran currently taking place in Qatar are proceeding very well.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.