FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்க தளங்களைத் தாக்கிய ஈரான்! பலத்த அடியைச் சந்திக்கப் போகிறார்கள்! - டிரம்ப் மிரட்டல்!

ஜோர்டானில் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரானிய படைகளுக்கு அதிபர் டிரம்ப் மிரட்டல்...

Updated On : 29 ஜூலை 2026, 10:07 pm IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம் - எக்ஸ்
பகிர்:

ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கியுள்ளன. ஈரானுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகளின் கிளர்ச்சிப்படைகளும் களமிறங்கியுள்ளன.

இந்தப் போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகளின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகளின் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது ஈரானிய படைகள் இன்று (ஜூலை 29) பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானிய படைகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

“நாங்கள் அவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தவுள்ளோம். அவர்கள் பலத்த அடியைச் சந்திக்கப் போகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பேட்டியில், அதிபர் டிரம்ப் ஈரானை தகாத வார்த்தைகளால் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

summary

Trump has stated that there will be a retaliation for the attacks carried out by the Iranian military targeting US bases in Jordan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments