முகப்பு
செய்திகள்

ஆக. 5 இல் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா

புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா வரும் வியாழக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன்

Updated On : 24 ஜூலை 2018, 12:55 am IST
பகிர்:

புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா வரும் வியாழக்கிழமை (ஜூலை 26) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிழா ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தூய பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை லெரின் டிரோஸ் திங்கள்கிழமை அளித்த பேட்டி:
புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 436 ஆம் ஆண்டு திருவிழா வரும் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜூலை 29 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில், புதுநன்மை திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனியும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெருவிழா கூட்டுத் திருப்பலி மற்றும் அன்னையின் திருவுருவப் பவனி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 7.30 மணிக்கு கோட்டாறு ஆயர் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. 
திருச்சி ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் பகல் 12 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப் பவனி நடைபெறுகிறது என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments