முகப்பு
செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: கீர் பவானி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

கீர் பவானி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டது பற்றி..

Updated On : 22 ஜூன் 2026, 2:03 pm IST
கீர் பவானி திருவிழா - PTI
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ரக்னியா தேவி கோயிலில் வருடாந்திர வருடாந்திர கீர் பவானி மேலாவில் ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிதர்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீநகரில் இருந்து வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுண்டு. மத்திய காஷ்மீரின், பிரம்மாண்டமான சினார் மரங்களின் நிழலில் அமைந்துள்ள இக்கோயில், 'ஜ்யேஷ்ட அஷ்டமி' மேலாவைக் கொண்டாட நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் சன்னதி வளாகத்தில் கூடியதால், விழாக்கோலம் பூண்டிருந்தது.

கீர் என்ற சொல் பால் மற்றும் அரிசி கொழுக்கட்டையைக் குறிக்கிறது. இங்குள்ள தெய்வத்தைச் சாந்தப்படுத்துவதற்காகப் பால் கொழுக்கட்டை நிவேதனமாக வழங்கப்படுகிறது. கீர் பவானி சில நேரங்களில் 'பால் தெய்வம்' என்றும் அழைப்பதுண்டு. பெரும்பாலான காஷ்மீர் இந்துக்கள் கீர் பவானியை தங்கள் குலதேவியாக வணங்குகிறார்கள்.

Advertisement

Advertisement

கோயில் வளாகத்தைச் சுற்றியும், சன்னதிக்குச் செல்லும் பாதை நெடுகிலும் பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.

மத்திய காஷ்மீர் மாவட்டத்தின் இந்த கிராமத்தில், பிரம்மாண்டமான சினார் மரங்களின் நிழலில் அமைந்துள்ள இக்கோவில், 'ஜ்யேஷ்ட அஷ்டமி' அன்று மேலாவைக் கொண்டாட நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் சன்னதி வளாகத்தில் கூடியதால், விழாக்கோலம் பூண்டிருந்தது.

கோயிலுக்கு அருகிலுள்ள ஓடையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி கீர் பவானி தேவியை வழிபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக காஷ்மீரி பண்டிட் தலைவர் சஞ்சய் சரஃப் கூறுகையில்,

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மேளா, ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு எப்போதுமே உண்மையான உதாரணமாக இருந்து வருகிறது என்றார்.

ஒவ்வொரு காஷ்மீரியும் இந்த மேலாவிற்காக ஒரு வருடம் காத்திருக்கிறார்கள். முஸ்லிம்களும் தங்கள் பண்டிட் சகோதரர்களைக் காண்பதற்காகக் காத்திருக்கிறார்கள். உண்மையான காஷ்மீரி மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்று நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம் என்று அவர் கூறினார்.

காந்தர்பால் துணை ஆணையர் ஜதின் கிஷோர், பக்தர்கள் சுமுகமாகவும் வசதியாகவும் தங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாகம் செய்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments