நெல்லையப்பர் கோயிலில் திருகால் நடுதல் வைபவம்!
நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா திருக்கால் நடுதலுடன் விமர்சையாக தொடங்கியது.
தமிழகத்தில் 30 நாள்கள் நடைபெறும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா திருக்கால் நடுதலுடன் விமர்சையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கோயிலில் அலங்கார பந்தல் அமைக்கும் பணி தேர் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கியது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயில் ஆனித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட திருத்தேர் உள்ளிட்ட ஐந்து தேர்கள் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இத்தகைய திருவிழா 30 நாள்கள் நெல்லையப்பர் கோயிலில் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் பூர்வாங்க பணிகளைத் தொடங்கும் விதமாகத் திருக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
2026 ஆம் ஆண்டுக்கான ஆனித் திருவிழா ஜூன் 28ஆம் தேதி தொடங்குகிறது. 30 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்கமாகத் திருகால் நடுதல் வைபவம் இன்றைய தினம் கோலாகலமாகக் கோயிலில் நடைபெற்றது. இதற்காகக் கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விநாயகருக்குச் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பின்னர் திருகாலுக்கு புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகாதீபாரதனை நடத்தப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயில் வாசல் மண்டபத்தில் திருக்கால் நடப்பட்டு திருவிழா பூர்வாங்க பணிகள் தொடங்கியது.
Advertisement
Advertisement
தொடர்ந்து அந்த காலுக்கு மஞ்சள் பால் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் ஒன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நவதானிய பொருள்கள் தூவி மகா தீபாராதனை நடந்தது. இதில் பிரதான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் திருக்கால் நடுநிலை தொடர்ந்து கோயில் வளாகத்தில் அலங்கார பந்தல் அமைக்கும் பணி தேர் சீரமைக்கும் பணி தேருக்குத் தேவையான பொருள்கள் செய்யும் பணி போன்றவை தொடங்குகிறது. வரும் ஜூன் 2ல் விநாயகர் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.