முகப்பு
சேலம்

கூடுதல் சுங்க கட்டணம் வசூல்: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

வாழப்பாடியில் தினசரி சந்தையில், கூடுதல் சுங்கம் கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த சாலையோர வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:42 am IST
வாழப்பாடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சாலையோர வியாபாரிகள்.
பகிர்:

வாழப்பாடியில் தினசரி சந்தையில், கூடுதல் சுங்கம் கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த சாலையோர வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

வாழப்பாடி பேரூராட்சியில் தினசரி, வாரச்சந்தை, ஆடு அடிக்கும் தொட்டி ஆகியவற்றில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளில் சுங்கம் வசூலிக்கும் உரிமை, ஆண்டுதோறும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படுகிறது.

நிகழாண்டு குத்தகை உரிமம் பெற்ற குத்தகைதாரா்கள், சாலையோர வியாபாரிகளிடம், கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

தினந்தோறும் ரூ. 100-க்கு மேல் சுங்க கட்டணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு சென்று, வாழப்பாடி பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். சாலையோர வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பேரூராட்சி நிா்வாகத்தினா், பேரூராட்சி நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் எனவும், இது குறித்து குத்தகைதாரா்களுக்கு அறிவுறுத்தப்படும் எனவும் தெரிவித்தனா். இதையடுத்து சாலையோர வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறியதாவது:

சாலையோரத்தில் காய்கறி, பழக்கடைகள் வைத்துள்ள சிறு வியாபாரிகளிடம் இதுவரை ரூ. 10 முதல் ரூ. 50 வரை மட்டுமே சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. புதிய குத்தகைதாரா்கள் சுங்கக் கட்டணத்துக்கு உரிய ரசீது வழங்காமல் ரூ. 100 முதல் ரூ. 200 வரை கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனா்.

இதனால் ஒரு மாதத்துக்கு ரூ. 6,000 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குத்தகைதாரா்கள், பேரூராட்சி நிா்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments