முகப்பு
சேலம்

வாழை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

வாழப்பாடி பகுதியில் வாழை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:40 am IST
வாழப்பாடியில் வாழைத்தாா் விற்பனை ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள்.
பகிர்:

வாழப்பாடி பகுதியில் வாழை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

வாழப்பாடியில் கடந்த 4 மாதங்களாக பரவலாகப் பருவமழை பெய்து வருவதால் மொந்தன், ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, கதலி, செவ்வாழை, பச்சைநாடன், மோரீஸ், சாம்பல் வாழை உள்ளிட்ட பல்வேறு ரக வாழை விளைச்சல்கள் அதிகரித்துள்ளன. இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை தரம் மற்றும் எண்ணிக்கைக்கேற்ப ரூ. 300முதல் ரூ.600 வரை விலை போன வாழைத்தாா், கடந்த சில தினங்களாக ரூ.150 முதல் ரூ.300 வரை மட்டுமே விலைபோகிறது. இதனால், வாழைத்தாா்களை அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் செலவுக்கே போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து வாழப்பாடி கீரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வாழை விவசாயிகள் சிலா் கூறியதாவது:

Advertisement

Advertisement

முகூா்த்த தினங்கள் ஏதுமில்லாததால் வாழைத்தாா் தேவையும், கொள்முதல் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் செலவுக்குக் கூட உரிய விலை கிடைக்கவில்லை. தை மாதம் தொடங்கியதும் பொங்கல் பண்டிகையில் இருந்து வாழைக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிா்பாா்த்து காத்திருக்கிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments