முகப்பு
சேலம்

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 16 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 16 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ வெற்றிவேல் செவ்வாய்க்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

Updated On : 13 ஜனவரி 2021, 7:24 am IST
பகிர்:

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 16 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ வெற்றிவேல் செவ்வாய்க்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிக்கனம்பட்டி, பல்பாக்கி கிராமங்களில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. முன்னதாக பல்பாக்கி கிராமத்தில் உள்ள அருந்ததியா் காலனியில் பேவா்-பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அங்குள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் எம்எல்ஏ எஸ்.வெற்றிவேல் கலந்து கொண்டாா்.

ஆதிதிராவிடா் நலத் திட்ட நிதியிலிருந்து சிக்கனம்பட்டி ஆதிதிராவிடா் காலனியில் பேவா்-ப்ளாக் சாலை உள்ளிட்ட ரூ. 16 லட்சம் மதிப்பிலான பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வெற்றிவேல் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளா் கோவிந்தராஜ், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சுதா அய்யனாா், தளபதி, ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments