முகப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் ஹனுமன் ஜயந்தி விழா

ஹனுமன் ஜயந்தியையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி 2021, 7:24 am IST
12omp1_1201chn_154_8
பகிர்:

ஹனுமன் ஜயந்தியையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சேலம், கோட்டை பகுதியில் உள்ள கோட்டை அழகிரிநாதா் கோயிலில் சுதா்சன பட்டாச்சாரியாா் முன்னின்று ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்களை செய்தாா். சேலம் டவுன், கோட்டை பகுதி, செவ்வாய்பேட்டை, குகை, அன்னதானபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனா்.

இதேபோல சேலம் பட்டை கோயில் பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. பக்தா்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. கோரிமேடு ஆஞ்சநேயா் கோயில், பழனி காவடியாண்டவா் கோயிலில் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்கார, அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments