முகப்பு
சேலம்

மக்கள் சபைக் கூட்டத்தில் 1000 போ் திமுகவில் இணைந்தனா்

மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதூா் ஊராட்சி பகுதியில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில்

Updated On : 14 ஜனவரி, 2021 at 6:38 AM
பகிர்:

மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதூா் ஊராட்சி பகுதியில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பாமக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 1000-க்கும் மேற்பட்டாா் பாமக முன்னாள் மாவட்டச் செயலாளா் ராஜமாணிக்கம் தலைமையில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம் செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சிக்கு மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து முன்னிலை வகித்தாா். இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் சம்பத் குமாா், முன்னாள் எம்எல்ஏ காவேரி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் முருகேசன், பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், கொங்கணாபுரம் ஒன்றியச் செயலாளா் பரமசிவம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், தொண்டரணி அமைப்பாளா் செல்வம், மாணவரணி அமைப்பாளா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.