முகப்பு
செய்திகள்

விஜய் செயலை அதிகம் நம்புவார்: ஷோபா சந்திரசேகர்

முதல்வர் விஜய் குறித்து அவரது அம்மா ஷோபா பேசியது...

Updated On : 22 ஜூன் 2026, 4:56 pm IST
தாய் சோபாவுடன் விஜய்.
பகிர்:

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவரது தாயார் சோபா சந்திரசேகர் பேசியுள்ளார்.

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். கடந்து ஆண்டுவரை நடிகராக இருந்தவர் இன்று தமிழகத்தின் முதல்வர் என்பதால் பல பகுதிகளிலும் தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் தாயார் சோஷா சந்திரசேகர் நேர்காணல் ஒன்றில், “ஒருநாள் விஜய் வந்து அரசியலுக்குச் செல்வதாகக் கூறினார். எங்களுக்குப் பயமாக இருந்தது. நடிப்பு மாதிரி அரசியல் இல்லை என்பதால் சொல்லிப்பார்த்தோம். இல்லை, நான் முடிவு செய்துவிட்டேன் என விஜய் சொன்னார். அவர் முடிவு எடுத்துவிட்டால் அதுதான் இறுதி. அறிவுரை சொன்னால் விஜய்க்குப் பிடிக்காது.

Advertisement

Advertisement

தேவையில்லாத விவாதத்திலும் கலந்துகொள்ள மாட்டார். செயலில் கவனம் செலுத்தவே அதிகம் விரும்புவார். விஜய் பெரிய தனிமை விரும்பி. வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றாலும் மனைவி, குழந்தைகளை ஷாப்பிங் அனுப்பிவிட்டு தன் அறையில் அமைதியாகத் தனியாகவே இருப்பார். அவருக்கு வெளியே போவது அதிகம் பிடிக்காது. காமராஜர் போல் என் மகன் வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Chief Minister Vijay's mother, Shoba Chandrasekhar, has spoken about him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments