FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அடுத்த சுதந்திர நாளுக்குள் முதல்வர் விஜய் பல விஷயங்களை சாதித்துக் காட்டுவார்: எஸ்.ஏ. சந்திரசேகர்

அடுத்த சுதந்திர நாளுக்குள் முதல்வர் விஜய் பல விஷயங்களை சாதித்துக் காட்டுவார் என எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது பற்றி...

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 1:07 pm IST
எஸ்.ஏ. சந்திரசேகர் - கோப்புப் படம்
பகிர்:

அடுத்த சுதந்திர நாளுக்குள் முதல்வர் விஜய் பல விஷயங்களை சாதித்துக் காட்டுவார் என இயக்குநரும், முதல்வரின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் பேசினார்.

நாட்டின் சுதந்திர நாள், சனிக்கிழமை (ஆக.15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆகையால், சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசு சார்பில் சுதந்திர நாள் விழா கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் விஜய், தமிழகாவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து, சரியாக காலை 8.45 மணிக்கு கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினார். இதையடுத்து, தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து பேசினார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் ஆகியோருக்கான புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

இதையடுத்து, தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது, சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை த்ரிஷா போன்றவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளரிடம் பேசியதாவது:

இது மிக மகிழ்ச்சியான தருணம். தமிழ்நாட்டுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். கண்டிப்பாக அதை செய்வார். ஏனென்றால், அவருடைய இலக்கே தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல அரசு அமைய வேண்டும் என்பதுதான். அடுத்த சுதந்திர நாளுக்குள் அவர் பல விஷயங்கள்ளை சாதித்துக் காட்டுவார். எங்களுடைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டார்.

summary

Director S.A. Chandrashekhar, who is also the Chief Minister's father, stated that Chief Minister Vijay would achieve many things by the next Independence Day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments