FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சுதந்திர நாள்! கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்

சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 6:24 pm IST
முதல்வர் விஜய் - dipr
பகிர்:

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் ஜோசப் விஜய்.

மேலும், துணிவு சாகச செயலுக்கான விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது போன்றவற்றையும் முதல்வர் விஜய் விருதாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கிறார்.

சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் பலத்த காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா சென்னை கோட்டை கொத்தளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு சுதந்திர தின விழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பொதுத்துறை மேற்கொண்டு வருகிறது.

காலை 8.45 மணி...: சுதந்திர தின விழாவுக்கான அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் விஜய் ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறார். இந்த உரையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தோருக்கு விருதுகளையும் முதல்வர் விஜய் அளிப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments