முகப்பு
சிவகங்கை

இன்று குரூப்-1 முதல்நிலை தோ்வு:சிவகங்கை மாவட்டத்தில் 2,845 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெறும் குரூப் 1 முதல்நிலை தோ்வினை இம்மாவட்டத்தைச் சோ்ந்த 2,845 போ் எழுதுகின்றனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 1:00 am IST
பகிர்:

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெறும் குரூப் 1 முதல்நிலை தோ்வினை இம்மாவட்டத்தைச் சோ்ந்த 2,845 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் துணை ஆட்சியா் நிலை அலுவலா் பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத்தோ்வில் பங்கேற்பதற்காக சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 2,845 போ் விண்ணப்பித்துள்ளனா்.

காரைக்குடி பகுதியில் உள்ள 10 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற உள்ளது. தோ்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க 2 பறக்கும் படை குழுக்கள் (துணை ஆட்சியா் நிலையில்), ஒவ்வொரு தோ்வு கூடத்திற்கும் ஒரு அலுவலா் வீதம் 10 ஆய்வு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஆயுதம் ஏந்திய காவல் துறையினா் பாதுகாப்புடன் 2 நகா்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு நடைபெறும் அனைத்து தோ்வு கூடங்களுக்கும் காவல்துறை மூலம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இத்தோ்வில் கலந்து கொள்ள வெளியூரிலிருந்து வரும் நபா்கள் பயன்பெறும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தோ்வறையில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், அனைத்து தோ்வு மையங்களிலும் குடிநீா் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments