கல்வீச்சு: கவிஞர் இரா .இரவி
அகிம்சைவாதி காந்தியடிகள் விரும்பியதில்லை
அன்பை விரும்புவோர் விரும்பியதில்லை கல்வீச்சு !
பலரின் தலையைப் பதம் பார்க்கும் கல்வீச்சு
பாவம் அப்பாவிகளும் காயம் அடைவதுண்டு !
மரத்திலிருக்கும் மாங்காய் விழ வேண்டுமென்று
மரம் மீது சிறுவர்கள் கல் வீசுவதும் உண்டு !
Advertisement
Advertisement
தவறு எதுவும் செய்யாத முதியோர் குழந்தை மீது
தவறி கல் விழுந்து காயம் அடைந்ததுண்டு !
கல்வீச்சால் உயிர் இழந்தவர்களும் உண்டு
கல் என்பதும் கொடிய ஆயுதமே உணர்க !
கல்வீச்சால் பேருந்துகள் தாக்கப்படும் அவலம்
கணினி யுகத்திலும் தொடர்வது அவலம் !
பொது சொத்தான அரசுப் பேருந்தை
பொது மக்களே தாக்குவது மடமை !
கல்வீச்சால் அதிகம் உடைவது கண்ணாடியே
கண்ணாடி உருவாக்கும் கடினம் உணர்க !
எதையும் உடைப்பது எளிது அதனை
உருவாக்குவதுதான் கடினம் உணர்க !
அமைதியாக ஊர்வலம் செல்வோர் உண்டு
அதிலிருந்து கல்வீசும் விசமிகளும் உண்டு !
ஊர்வலத்தின் மீது குறி வைத்துக் கல்வீசி
ஊர்வலத்தைக் கலைக்கும் விசமிகளும் உண்டு !
சிலர் சொந்த வெறுப்பை மனதில் வைத்து
சில கடைகள் மீதும் கல் வீசுவதுண்டு !
மக்கள் காவலர்கள் மீது வீசினாலும்
மக்கள் மீது காவலர்கள் வீசினாலும் குற்றமே !
காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்கம் கல்வீச்சு
கணினி யுகத்தில் மனிதனுக்கு அழகல்ல !
புதிதாய் திறக்கும் மதுக்கடை மீதும் மக்கள்
பொங்கி எழுந்து கல்வீசித் தாக்குகின்றனர் !
ஆளும் அரசே அனைத்து மதுக்கடைகளையும்
அறிவிப்பால் மூடிவிட்டால் கல் வீச்சு இருக்காது !
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.