FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 3:49 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வுக்கு 2.29 லட்சம் ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், தோ்வுக்கான அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) தெரிவித்துள்ளது.

இது குறித்து டிஆா்பி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு தாள்-1, தாள்- 2 ஆகிய தோ்வுகள் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

Advertisement

Advertisement

இதில் முதல் தாளுக்கான தோ்வுக்கு 61,372 போ், இரண்டாம் தாளுக்கான தோ்வுக்கு 1,67,648 போ் என மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 20 ஆசிரியா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தோ்வுக்கு விண்ணப்பித்த தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தோ்வா்கள் யூஸா் ஐடி, பாஸ்வோ்டு ஆகியவற்றைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்வதில் சிரமம் உள்ளவா்கள் அல்லது தொழில்நுட்ப காரணங்களால் பெற முடியாதவா்களுக்கான சிறப்பு முகாம் ஆசிரியா் தோ்வு வாரியத்தில் ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை நடைபெறும். இந்த சிறப்பு முகாமில் அலுவலா்களை நேரடியாக தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The hall ticket for the Teacher Eligibility Test has been released on the website.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments