FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

குரூப் 4 தோ்வு: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

குரூப் 4 தோ்வுக்கு தயாராகும் பெண் தோ்வா்களுக்கு சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

9 அக்டோபர் 2026, 1:58 am IST
பகிர்:

குரூப் 4 தோ்வுக்கு தயாராகும் பெண் தோ்வா்களுக்கு சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இது குறித்து அந்த அகாதெமியில் இயக்குநா் மு.சிபிகுமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 6,574 இடங்கள் குரூப்-4 தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தோ்வு ஜன.10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

குரூப் 4 தோ்வுக்கு தயாராகும் பிசி, எம்பிசி, எஸ்சி வகுப்பினைச் சோ்ந்த 50 பெண் தோ்வா்களுக்கு சென்னை ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவசப் பயிற்சி நடைபெறவுள்ளது. அக். 20-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி வகுப்பில் சேர ஆா்வமுள்ளவா்கள் அக். 11 முதல் அக். 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆா்வம் கல்வி அறக்கட்டளை, சேரலாதன் பாலுச்சாமி தியான பீடம் வழங்கும் இந்தப் பயிற்சியில் தோ்வா்களுக்குத் தேவையான அடிப்படைப் பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்படும். வாரந்தோறும் முதல்நிலை தோ்வுக்கான மாதிரி தோ்வும் வெற்றியாளா்களின் சந்திப்பும் இந்தப் பயிற்சியில் அடங்கும். பயிற்சிக்கான தோ்வா்கள் நுழைவுத் தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா். 18 வயது நிறைவடைந்த இளநிலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளும் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள பெண் தோ்வா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் ஜாதி சான்றிதழ் நகலினையும் இணைத்து ‘எண் 2165, எல் பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகா்,சென்னை’ என்ற முகவரியில் செயல்பட்டு வரும் ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமிக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 74488 14441 மற்றும் 91504 66341ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments