திருச்சியில் நாளை முதல் குரூப் 4 - தோ்வுக்கு இலவச பயிற்சி
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 4 போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (அக். 15) முதல் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 4 போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை (அக். 15) முதல் நடைபெற உள்ளது.
குரூப் 4 தோ்வுக்கு இணையதளம் வாயிலாக 05.11.2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வரும் 15 ஆம் தேதி காலை 10 மணியளவில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
இதில், சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு அனைத்துப் பாடப் பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டு இலவசமாகப் பாடக் குறிப்புகளும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை 0431-2413510, 94990 55902 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.