ஐஎஸ்எல் கால்பந்து: சென்னைக்கு 3-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 57-ஆவது லீக் ஆட்டத்தில், சென்னையின் எஃப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸô எஃப்.சி. அணியை வீழ்த்தியது.
கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 57-ஆவது லீக் ஆட்டத்தில், சென்னையின் எஃப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிஸô எஃப்.சி. அணியை வீழ்த்தியது.
கோவாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி தொடக்கம் முதலே அபாரமாக ஆடியது. இதனால் அந்த அணி 15-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை கான்கால்வ்ஸ் அடித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய சென்னை அணிக்கு 21-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதையும் கான்கால்வ்ஸ் கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் தொடர்ந்து போராடிய ஒடிஸô அணி 63-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை டி பிரிட்டோ அடித்தார்.
இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் இந்த சீசனில் 3-ஆவது வெற்றியைப் பெற்ற சென்னை அணி 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.