முகப்பு
விளையாட்டு

ஆசிய தடகளம்: தில்லி, புணே, ராஞ்சி நகரங்கள் பரிசீலனை

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த தமிழகம் மறுத்து விட்ட நிலையில், தில்லி, புணே மற்றும் ராஞ்சி ஆகிய

Updated On : 12 மார்ச் 2013, 12:58 am IST
பகிர்:

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த தமிழகம் மறுத்து விட்ட நிலையில், தில்லி, புணே மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களை அரசு பரிசீலித்து வருகிறது.

இத்தகவலை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஆசிய தடகளப் போட்டியை தில்லி, புணே மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களில் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்ட கடிதம் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

ஆசிய தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க உள்ளதைத் தொடர்ந்து, அப்போட்டியை தமிழகத்தில் நடத்த தமிழக அரசு சம்மதிக்கவில்லை. இது குறித்து கேள்வி நேரத்தின்போது பேசிய ஜிதேந்திர சிங், தமிழக அரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.