முகப்பு
விளையாட்டு

சத்யபாமா பல்கலைக்கழகம்: விளையாட்டு ஒதுக்கீடு இடங்களுக்கான தேர்வு

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை

Updated On : 2 ஏப்ரல் 2013, 12:05 am IST
பகிர்:

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேர்வு வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொறியியல் மற்றும் கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் மாணவர்களுக்கான விளையாட்டு இட ஒதுக்கீட்டுத் தேர்வு வரும் வியாழக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, பாட்மிண்டன், கபடி, கிரிக்கெட் மற்றும் டேக்வோண்டா உள்ளிட்ட விளையாட்டுகளில் பங்குபெறும் மாணவர்கள் இட ஒதுக்கீட்டுத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், உரிய சான்றிதழ்களுடன் பல்கலைக்கழகத்துக்கு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும் விவரங்களுக்கு விளையாட்டுப் பொறுப்பாளர் கே.ரவிக்குமாரை 9840704061 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.