தெற்கு ஆசிய டிரையத்லான் இந்தியாவுக்கு 2 பதக்கம்
தெற்கு ஆசிய டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தங்கம் உள்பட இரண்டு பதக்கங்களை வென்றது.
தெற்கு ஆசிய டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தங்கம் உள்பட இரண்டு பதக்கங்களை வென்றது.
மூன்று போட்டிகளை (நீச்சல், சைக்கிள் மற்றும் ஓட்டப்பந்தயம்) உள்ளடக்கிய டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டி நேபாளம், பொஹாராவில் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்கும் வீரர், 750 மீட்டர் தூரத்தை நீச்சலடித்தும், 20 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலும், 5 கிலோ மீட்டர் தூரத்தை ஓடியும் கடக்க வேண்டும்.
இப்போட்டியின் மகளிர் பிரிவில் பூஜா தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் பிரிவில் மதுர்ஜ்யா வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற வீரர்களை இந்திய டிரையத்லான் சம்மேளன பொது செயலர் ராகேஷ் குப்தா பாராட்டினார்.
Advertisement
Advertisement