முகப்பு
விளையாட்டு

ஸ்ரீசாந்த், அங்கித், சாண்டிலாவுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு

ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக கடந்த 16-ஆம் தேதி கைதான ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா உள்ளிட்ட 11 பேரின் போலீஸ் காவல்

Updated On : 22 மே 2013, 1:37 am IST
பகிர்:

ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக கடந்த 16-ஆம் தேதி கைதான ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா உள்ளிட்ட 11 பேரின் போலீஸ் காவல் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.

அதையடுத்து, சாகேத் மாஜிஸ்திரேட் நீதிமன்ற முதன்மை நீதிபதி லோகேஷ் குமார் சர்மா முன்னிலையில் அவர்களை போலீஸôர் ஆஜர்படுத்தினர்.

அப்போது, "கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கும் மற்ற மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர்களுக்கும் உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும். அதனால், இவர்களின் போலீஸ் காவலை மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும்' என்று போலீஸôர் கேட்டுக் கொண்டனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா உள்ளிட்ட 11 பேரை மேலும் ஐந்து நாள்களுக்கு போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.