உலகக் கோப்பை வில்வித்தை: ஆடவர் அணிக்கு வெண்கலம்
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவர் அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவர் அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
2013-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியின் 3-வது கட்டம் கொலம்பியாவின் மெடிலின் நகரில் நடந்தது. இப்போட்டியில் அணிப் பிரிவிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இதில், ரஜத் செüகான், சந்தீப் குமார் மற்றும் ரத்தன் சிங் ஆகியோரடங்கிய இந்திய அணி, கொலம்பியாவுடன் மோதியது. இப்போட்டியின் முதல் சுற்றில் இந்திய அணி 52-50 என்று முன்னிலை பெற்றது. ஆனால் 2-ம் சுற்றில் கொலம்பிய அணி 104-102 என்று முன்னிலை அடைந்தது. மூன்றாவது சுற்றில் இந்திய அணி 158-156 என்று மீண்டும் முன்னிலை பெற்றது.
Advertisement
இதைத் தொடர்ந்து 4-வது சுற்றில் இந்திய அணி 57 புள்ளிகள் பெற்றது. இதனால், 215-210 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.