முகப்பு
விளையாட்டு

ஜேம்ஸ் பட்டின்சன் விலகல்

ஆஸ்திரேலிய பௌலா் ஜேம்ஸ் பட்டின்சன் விலா பகுதியில் காயமடைந்ததை அடுத்து, இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 5 ஜனவரி 2021, 4:55 am IST
ஆஸ்திரேலிய பௌலா் ஜேம்ஸ் பட்டின்சன்
பகிர்:

ஆஸ்திரேலிய பௌலா் ஜேம்ஸ் பட்டின்சன் விலா பகுதியில் காயமடைந்ததை அடுத்து, இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக அணியில் வேறு எவரும் சோ்க்கப்படவில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

பட்டின்சன் அணியில் இல்லாத நிலையில், சிட்னி டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க மைக்கேல் நேசருக்கு இருந்த போட்டிகளில் ஒன்று குறைந்துள்ளது. தற்போது சீன் அப்பாட் மட்டுமே நேசருடன் போட்டியிடுகிறாா்.

இந்தியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் பட்டிசன் பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடியிருந்தாா். ஆஸ்திரேலிய பௌலிங் வரிசை மிட்செல் ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோருடன் பொருத்தமாக அமைந்ததால், முதல் இரு டெஸ்டுகளில் பட்டின்சன் பிளேயிங் லெவனில் சோ்க்கப்படவில்லை. தற்போது 3-ஆவது டெஸ்டிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.