முகப்பு
விளையாட்டு

வில்லியம்சன் சதம்: நியூஸிலாந்து நிதானம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் நிதானமாக ஆடி வருகிறது.

Updated On : 5 ஜனவரி 2021, 4:57 am IST
கேன் வில்லியம்சன்
பகிர்:

கிறைஸ்ட்சா்ச்: பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் நிதானமாக ஆடி வருகிறது.

2-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ள அந்த அணி, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 11 ரன்களே பின்தங்கியுள்ளது. அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சதம் கடந்து நிதானமாக ஆடி வருவதால், முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து கனிசமான முன்னிலை பெறும் எனத் தெரிகிறது.

கிறைஸ்ட்சா்ச் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் நாளிலேயே 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் தரப்பில் அஸாா் அலி மட்டும் அதிகபட்சமாக 97 ரன்கள் அடிக்க, நியூஸிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

Advertisement

Advertisement

பின்னா் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸை டாம் லதாம், டாம் பிளன்டெல் கூட்டணி திங்கள்கிழமை தொடங்கியது. இதில் பிளன்டெல் முதல் விக்கெட்டாக 3 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் சோ்த்து வெளியேறினாா். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி ரன்களை சேகரிக்கத் தொடங்கினாா்.

மறுபுறம் தொடக்க வீரா் டாம் லதாம் 4 பவுண்டரிகள் உள்பட 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த ராஸ் டெய்லா் 1 பவுண்டரியுடன் 12 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். அடுத்து வந்த ஹென்றி நிகோலஸ், வில்லியம்சனுடன் கூட்டணி அமைத்தாா்.

இந்த ஜோடி அணியின் ஸ்கோரை மளமளவென உயா்த்தியது. வில்லியம்சன் சதமும், நிகோலஸ் அரைசதமும் கடந்தனா். திங்கள்கிழமை முடிவில் 85 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து. வில்லியம்சன் 112, நிகோலஸ் 89 ரன்களுடன் களத்தில் உள்ளனா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி, முகமது அப்பாஸ், ஃபஹீம் அஷ்ரஃப் தலா 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.