முகப்பு
ஸ்பெஷல்

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள்: விராட் கோலி சாதனை!

இந்த இன்னிங்ஸின்போது ஐபிஎல்-லில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையையும் அவர் படைத்தார்...

Updated On : 18 ஏப்ரல் 2018, 12:06 pm IST
பகிர்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 14-வது ஆட்டம் மும்பைக்கும்-பெங்களூரு அணிகள் இடையே வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பெற்றது.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 92 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் இந்த இன்னிங்ஸின்போது ஐபிஎல்-லில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையையும் அவர் படைத்தார். 4558 ரன்கள் எடுத்திருந்த சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவின் சாதனையைக் கடந்து தற்போது 4619 ரன்கள் எடுத்துள்ளார் கோலி.  

ஐபிஎல் - அதிக ரன்கள்

Advertisement

Advertisement

4619 விராட் கோலி
4558 சுரேஷ் ரெய்னா 
4345 ரோஹித் சர்மா
4210 கெளதம் கம்பீர்
4014 டேவிட் வார்னர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.